முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல இந்தி இயக்குநருடன் இணைகிறார் துல்கர் சல்மான்!

பிரபல பாலிவுட் இயக்குநர் இயக்கும் சைக்காலஜி த்ரில்லர் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார்.

பிரபல நடிகரும் மலையாள ஹீரோ மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

இப்போது தமிழில், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும், ’ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி உட்பட பலர் நடித்துள்ளனர். இவர் நடித்துள்ள ’குரூப்’ என்ற படம் மலையாளம், தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே, அவர் பிரபல இந்திப் பட இயக்குநர் ஆர்.பால்கி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர், அமிதாப்பச்சன் நடிப்பில் சீனிகம், பா, அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப், அக்‌ஷய்குமார் நடித்த பேட்மேன் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

துல்கர், ஆர்.பால்கி இணையும் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சைக்காலஜி த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

Halley karthi

திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பரிசீலனை: முதலமைச்சர் ஸ்டாலின்

Halley karthi

இந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசி

Gayathri Venkatesan