அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களால் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் ஒற்றை…

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களால் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபின்னர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன, அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.

இரண்டாவதாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

மூன்றவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கே துணை பொதுச் செயலாளரை நியமனம் செய்யும் பொறுப்பு வழங்கபட்டது.  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நான்கு மாத காலத்திற்குள் முடிப்பது எனவும் முடிவெடுக்கபட்டது.

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதிமுக அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வெற்றிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட 16 தீர்மானங்கள் போக, சிறப்பு தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொண்டு வந்தார். அதில் அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், கட்சிக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக கூறி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக அமைப்பு செயலாளர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.