முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு துணை தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன?

குடியரசு துணை தலைவர் என்பது இந்திய நாட்டின் இரண்டாவது மிக உயரிய பதவி ஆகும். வெங்கையா நாயுடுவுக்கு பிறகு தற்போது குடியரசு துணை தலைவராக ஜகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ளார். அவர் மேற்கொள்ளவுள்ள பணிகள் மற்றும் அவருக்கான அதிகாரங்கள் குறித்து பார்க்கலாம்…

 

குடியரசு துணை தலைவரின் முக்கிய பணி மாநிலங்களவை தலைவராக செயல்படுவது ஆகும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அவையை வழிநடத்தும் அவர், எம்.பி.க்கள் அவையின் மான்பை முறையாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்வார். அவை நடவடிக்கைகள் முறையாக இருப்பதை உறுதி செய்வதோடு, மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைப்பதிலும் குடியரசு துணை தலைவரின் பங்கு முக்கியமானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அவைக்குள் எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு பொறுப்பும் அவைத்தலைவருக்கே உள்ளது. குடியரசு தலைவரின் இறப்பு, ராஜிநாமா, பதவி நீக்கம் உள்ளிட்ட சமயங்களில் தற்காலிக குடியரசுத் தலைவராக துணை குடியரசு தலைவரே செயல்படுவார். அடுத்த குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பில் நீடிப்பார்.

தற்காலிக குடியரசு தலைவராக அவர் பொறுப்பு வகித்தாலும் குடியரசு தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் அவரிடம் இருக்கும். மேலும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர் பெறுவார். அவர் குடியரசு தலைவராக பணியாற்றும் சூழலில் மாநிலங்களவையை வழிநடத்த இயலாது. அத்தகைய சமயங்களில் அவையின் துணைத் தலைவரோ அல்லது குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் நபரோ அவையை வழிநடத்துவார்.

 

குடியரசு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்தபோதிலும் புதியகுடியரசு துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அவரே தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கலாம். அதற்கு தடை எதுவும் இல்லை. குடியரசு துணைத்தலைவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜினாமா செய்ய விரும்பினால், அதற்கான கடிதத்தை குடியரசு தலைவரிடம் வழங்க வேண்டும். ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட நாளில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

குடியரசு துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய விரும்பினால் மாநிலங்களவையில் 14 நாள்களுக்கு முன்பே அதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும். அத்தீர்மானத்துக்கு அவைக்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவு இருக்க வேண்டும். மேலும் அத்தீர்மானத்துக்கு மக்களவை உறுப்பினர்களில் பாதி பேர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு பிறகே குடியரசு துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

12ம் வகுப்புத் தேர்வில் மாற்றம்: தேர்வுகள் இயக்ககம்!

EZHILARASAN D

தேமுதிக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி!

G SaravanaKumar

கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டது

Halley Karthik