ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நிறைவேற்றபடாத 10 கோரிக்கைகளை மக்கள் தொகுதியின் குரல் வாயிலாக முன்வைத்தனர்.
1. தினசரி 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயணிக்கும் படப்பை, ஒரகடம், சுங்கவார்சத்திரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேருந்து நிலையம் மற்றும் கழிவறை அமைக்க வேண்டும்.
2. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எக்ஸ்பிரஸ் சாலைக்கும் , தேசிய நெடுஞ்சாலைக்கும் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
3. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கிடப்பில் உள்ள பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

4. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்.
5. சிப்காட் தொழிற்பூங்காக்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால் தொழிற்சாலை கழிவுகளை ஆங்காங்கே கொட்டி எரித்து, அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்.
6. ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் (ராமானுஜர்) திருக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மற்றும் அரசின் நீர்நிலை மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் 1000 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்க வேண்டும்.
7. பல வருடங்களாக சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அதனால் சிதலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

8. 10 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்து வசதி இல்லாத வளையக்கரணை , சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
9. 5 சிப்காட்டில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் எடுக்கப்படும் ஸ்க்ராப் தொழிற்போட்டியால் ஏற்படும் வெட்டுக்குத்து மற்றும் ரவுடியிசம் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. வடமாநிலத்தவர்கள் அதிகம் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த வடமாநிலத்தவரை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.







