தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நிறைவேற்றபடாத 10 கோரிக்கைகளை மக்கள் தொகுதியின் குரல் வாயிலாக முன்வைத்தனர்.
1. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.
2. ஆலங்குளத்தில் மக்களின் நீண்டகால கோரிக்கையான போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும்.
3. ஆலங்குளத்தில் இருந்து தென்காசி– திருநெல்வேலிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

4. ஆலங்குளம் தலைமை மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், கூடுதல் சிகிச்சை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
5. கடையம் ஆரம்பசுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும்.
6. ஆலங்குளம், பூலாங்குளம், நெட்டூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், நாற்காலிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
7. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தரும் வகையில் ஆலங்குளத்தை மையமாக கொண்டு தொழில்பூங்கா அமைக்க வேண்டும்.

8. ஆலங்குளத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் மாவட்ட உரிமையில் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் அமைத்து தரவேண்டும்.
9. ஆலங்குளம் ஒக்கநின்றான் பொத்தை மலையடிவாரத்தில் விவசாய நிலங்களை நாசம் செய்து வரும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தவும், விவசாய நிலங்களை சுற்றி உயிர்தேசம் இல்லாத மின்வேலி அமைக்க அரசு நடடிவக்கை எடுக்க வேண்டும்.
10. விவசாயிகள் நலனில் அக்கறைக் கொண்டு விவசாயத்தை பாதுகாக்க காய்கறி பதப்படுத்தும் மையம், உழவர்சந்தை உருவாக்க வேண்டும்.







