தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம்; யார் யாருக்கு ரூ.1,000 ?

தமிழ்நாடு அரசின் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கல்வி தொகை பெற யார், யார் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு…

தமிழ்நாடு அரசின் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கல்வி தொகை பெற யார், யார் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்க்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன்படி கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் என்று அனைத்து வகை கல்லூரிகளில் யுஜி பயிலும் மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் என்ற பெயரில் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.1,000 உதவித்தொகை பெற 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சம்
பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.698 கோடியில் நடப்பு செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு மே வரை ஒவ்வோர் மாதமும் 1 லட்சம் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.


திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட உடனேயே, 1 லட்சம் மாணவியரின் வங்கிக்கணக்குக்கும் ரூ.1,000 செலுத்தப்பட்டு, முதலமைச்சரின் வாழ்த்துடன் Auto Generated SMS அனுப்பப்பட்டது. எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் 1 லட்சம் மாணவியருக்கும் வங்கி அதிகாரிகள் புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட புதிய ATM Card-ஐ வழங்கினர்.

வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் ரூ.1,000 -ஐ சேமித்து வைக்கவோ அல்லது அவ்வப்போது எடுத்து செலவு செய்யவோ எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், உயர்கல்வி சேரும் மாணவியரின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தவும் ரூ.1,000 திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வறுமை காரணமாக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி சேர்ந்தாலும், படிப்பு செலவுக்கென தனியாக மாதம் ரூ.1,000 வழங்குவது பேருதவி என்று பயன்பெற்ற மாணவியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.