தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 05-07-2021ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஊரடங்கில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகளும், ஒரே மாதிரியான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதெற்கெல்லாம் தடை
- மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை.
- திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை.
- அனைத்து மதுக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை.
- நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை.
- பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
- பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை.
- உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை.
- திருமணங்களுக்கு 50 பேரும், இறப்புகளுக்கு 20 பேரும் மட்டும் அனுமதி.
மேற்கண்ட செயல்பாடுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.







