முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாடு முழுவதும் எதெற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 05-07-2021ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஊரடங்கில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகளும், ஒரே மாதிரியான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல செயல்பாடுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதெற்கெல்லாம் அனுமதி?

 1. அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகளுக்கு அனுமதி.
 2. உணவு விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
 3. தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி.
 4. கேளிக்கை விடுதிகளில் உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
 5. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
 6. தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள், செயல்பட அனுமதி. அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
 7. அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கபப்ட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
 8. உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
 9. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.
 10. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
 11. துணிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
 12. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 5-% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
 13. மாவட்டத்திற்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி
 14. SRF/JRF, M.phil, Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதி. இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி.
 15. 15 அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50% பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் செயல்பட அனுமதி.
 16. பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
 17. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து.

இந்த அனுமதிகள் எல்லாம் ஜூலை 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

Jeba Arul Robinson

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

காற்று மாசு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு எம்.பி., கடிதம்

Saravana Kumar