தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் சேர்ந்து கொரோனா பாதிப்பில் மூன்றாம் வகை மாட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதெற்கெல்லாம் அனுமதி:
- அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- அனைத்துக் துணிக்கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.
- அனைத்து நகைக்கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள் (Shopping Complex/Malls) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி. வணிக வளாகங்களில் உள்ள உணவங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.
- கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
- காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி.
பொதுவான அனுமதி:
- அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 வரை நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் அனுமதிக்கப்பட்டும்.
இவை தவிர மக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றவும், முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.







