கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரமானது தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. 2021 முதல் காலாண்டில் ஏற்றுமதியில் நாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலை விட 2021ம் ஆண்டு ஏப்ரலில் 38% இந்த முதலீடு அதிகரித்துள்ளது. தற்போது வரை 50,000 புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய தொழில்துறை அனுமதியளித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியிலும் இது சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 2020-201 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடானது 81.72 பில்லியன் டாலர் வரை வந்திருப்பதாகவும், 2021 முதல் காலாண்டில் மட்டும் 6.24 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளதாக கோயல் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை செயலாளர் கிரிதர் அரமனே, 16,000 அங்கீகரிக்கப்பட்ட இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் 1.8 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.