ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்!

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதினை மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் வென்றுள்ளார்.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து…

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதினை மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் வென்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.  இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஆலி போப் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் இளம் வீரரான ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.  இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை யார் வென்றார்கள் என ஐ.சி.சி தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் இளம் வீரரான ஷமர் ஜோசப் வென்றுள்ளார்.  மேலும், சிறந்த வீராங்கனை விருதை அயர்லாந்தின் ஏமி ஹண்டர் வென்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.