முக்கியச் செய்திகள் விளையாட்டு

6 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்-2வது டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி

5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2வது டி20 ஆட்டம் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இந்திய அணி முதலில் களம் இறங்கியது. களமிறங்கிய உடனடே கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

3வது ஓவரில் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்க, அடுத்து ஸ்ரேயஸ் ஐயரும் நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி தொடக்கத்திலேயே தள்ளாடியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடியபோதிலும் அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் ஜடேஜா 27 ரன்களில் வெளியேறினார்.

இவ்வாறாக இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 138 ரன்கள் எடுத்தது.

139 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஓபெட் மெக்காய் 4 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை சுருட்டினார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் பிரான்டன் கிங் 68 ரன்களும், டேவன் தாமஸ் 31 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 6 விக்கெட்டுகளை சுருட்டிய ஓபெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3வது டி20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி!

Jayapriya

ரஷித்கான் பந்துவீச்சில் பேட்டிங் செய்ய ஆசை: சச்சின் டெண்டுல்கர்!

Saravana

அதிமுக பலவீனப்படுவது தமிழக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-தொல்.திருமாவளவன்

Web Editor