வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஷிகர் தவன் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது.
இதன்படி முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற 2வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
டிரினிடட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் சதம் பதிவு செய்தார். அடுத்தபடியாக கேப்டன் பூரன் 74 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 49.4வது ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி கண்டது.
அதிகபட்சமாக அக்ஸர் படேல் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 63 ரன்களும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 54 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் தவன் 13 ரன்கள் எடுத்தார். அரை சதம் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுபமன் கில் 43 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அல்ஜாரி ஜோசப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில்தான் முதல் முறையாக அரை சதம் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார்.








