முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் பேச்சுக்கே இடமில்லை- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார்.

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை தாண்டி பணவீக்க விகிதத்தை 7 சதவீதம் மற்றும் அதற்கு கீழாக மத்திய அரசு கட்டுப்படுத்தி வருவதாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்றபோது, பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியிருந்ததாகக் கூறிய நிர்மலா சீதாராமன், இந்த கால கட்டத்தில் தொடர்ந்து 22 மாதங்கள் 9 சதவீதத்திற்கு மேல் பணவீக்கம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தியா அனைத்துவிதமான பொருளாதார சவால்களிலிருந்தும் மீண்டு வந்துள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் இதற்கு பெரிதும் உதவியதாகக் கூறினார். வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி தெரிவித்தார். வங்கிகளின் மொத்த வாராக் கடன்களின் விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். ஏழை மக்கள் நலனில் மத்திய பாஜக அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருள் போன்றவற்றின் மானியத்திற்காக 24.85 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதே நேரம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 13.9 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியை கணிசமான அளவிற்கு மத்திய அரசு குறைத்துள்ளதாக குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இறக்குமதிக்கான செலவை மத்திய அரசு  மலிவாக்கியுள்ளதாக கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி 6வது முறையாக கடந்த ஜூலை மாதத்தில் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் விளக்கம் அளித்தார். இதற்கிடையே நிர்மலா சீதராமன் விளக்கத்தை ஏற்க மறுத்து மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

Vandhana

விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

Web Editor

முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை செய்து புதைப்பு

G SaravanaKumar