முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தல் நாளை தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 3 கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 4-ம் கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்று 4-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 44 தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 2-ம் கட்ட வாக்குப்பதிவின்போது நந்திகிராம் தொகுதியில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதன்காரணமாக நாளை நடைபெறும் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 44 தொகுதிகளிலும் உள்ள 15 ஆயிரத்து 940 வாக்குச்சாவடிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய ஆயுத காவல் படையினருக்கு ஆதரவாக மாநில காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிறந்த நாளில் ‘கற்றார்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை தொடங்கிய ஏ ஆர் ரஹ்மான்..

Web Editor

டி-20 கிரிக்கெட்: விராத் கோலி அசத்தல் சாதனை

EZHILARASAN D

நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

Halley Karthik