வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை ஊராட்சி வாரியாக பதிவு செய்ய பதிவேடு, தொடர்புகொள்ள தனி தொலைப்பேசிகள் அமைப்பது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கபட்டதாகக் கூறினார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.







