முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சென்னை அழைத்து வரப்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன்

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் பணம் செலுத்துவதுபோல் நடித்து, நூதன முறையில் 48 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த கொள்ளை சம்பவங்களில் ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். ஹரியானா சென்ற தனிப்படையினர் ஏற்கனவே மூன்று பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்த நிலையில், கொள்ளை கும்பல் தலைவனான சவுகத் அலி என்பவரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

இந்நிலையில், விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட சவுகத் அலியை, கீழ்பாக்கம் காவல்நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து தற்போது சவுக்கத் அலியை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

குருவாயூர் கோயில் யானை வலிய மாதவன்குட்டி மரணம்

Gayathri Venkatesan

நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

Saravana Kumar

விதிமுறை மீறல்.. 3 கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வருடம் தடை

Gayathri Venkatesan