நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவுபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், இந்த ஆண்டும், ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளது. கடந்த முறை சமூக இடைவெளியை கடைபிடிக்க மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெற்றது.