டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

டெல்டா மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா…

டெல்டா மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 20ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.