முக்கியச் செய்திகள் விளையாட்டு

’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்பு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் நியமிக்கப்பட்டி ருப்பது சரியான முடிவல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனை யாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15- ஆம் தேதி வரை நடத்தப் படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். ஐ.பி.எல். தொடர் தொடங்கும் முன்பே, தோள்பட்டை காயம் காரணமாக அவர் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப் பை ஏற்றார். முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி, 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளி களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இதற்கிடையே, ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதால், அவர் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அவர் நீடிப்பாரா அல்லது ரிஷப் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரிஷப் பண்டே கேப்டனாக தொடரு வார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்ஸ்மேனாக அணியில் தொடர்வார்.

இந்நிலையில் இந்த முடிவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனை யாளருமான ஆகாஷ் சோப்ரா, இது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லி அணி நிர்வாகத்தின் இந்த முடிவு, தனிப் பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு கேப்டனை நியமித்திருக்கிறீர்கள். அவர், உங்கள் அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் செல்கிறார். திடீரென அவர் காயமடைகிறார். இதற்காக ஒரு புதிய கேப்டனை நியமிக்கிறீர்கள். அவர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்ததும் அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்காதது சரியான முடிவல்ல. ஆனால், ரிஷப் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், அவரையே தேர்வு செய்திருக்கிறார்கள்’என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராகுலின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது-மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Editor

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!

G SaravanaKumar

பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பெருமை: சோனியா காந்தி

Mohan Dass