மேற்காசிய மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
அதன் படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90-க்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் லிட்டருக்கு ரூ. 3.11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47-க்கு விற்பனையாகிறது.







