அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்த முன்னறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.