நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தலைமையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதாக குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 தொகுதிகளையும் வெல்வோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அதிமுக கட்டிய கட்டிடங்களைத் தான் உதயநிதி கோவையில் திறந்து வைத்துள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக கட்டிய பாலத்தில் உதயநிதியின் பெயரும், திமுக போஸ்டர்களும் ஒட்டியது தான் அவர்கள் செய்த சாதனை என்று விமர்சித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ் கொண்டுவந்த திட்டங்களைதான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக கூறினார்.







