’அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’ – தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவுற்றது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது, இப்போட்டியை நடத்துவதில் கிராமத்தினர், தென்கால்…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவுற்றது.

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது, இப்போட்டியை நடத்துவதில் கிராமத்தினர், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், காளை வளர்ப்போர் என பல்வேறு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதுதொடர்பாக 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாமல் நிறைவுற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு நடத்தமால், வேறு அமைப்பினர் நடத்த முயன்றால் நீதிமன்றம் செல்வோம் என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.