முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் – அன்புமணி ராமதாஸ்

இன்று கர்மவீரர் காமராஜர் அவர்கள் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளைக் கட்டியிருப்பார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் ஜெ.முத்துரமேஷ் தலைமையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 130 சிறந்த நாடார் சங்கங்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் “என்னுடைய நோக்கம் அடிமட்டத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் முன்னேற வேண்டும். தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறார். 130 சங்கங்களை இணைத்துச் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாட்டிலே உழைக்கின்ற சமுதாயம் என்று பார்த்தால் அது நாடார் சமுதாயம். இந்த வட்டத்திற்கு மேல் ஜாதி என்ற ஒரு வட்டம் அதற்கு மேல் மதம் என்ற ஒரு வட்டம் உள்ளது. அதற்குச் சுற்றி இனம் என்ற வட்டம் அதைச் சுற்றி மொழி என்ற வட்டமும் அதைச் சுற்றி இந்தியா எனும் வட்டம் உள்ளது.

மது ஒழிப்பிற்குப் போராட வேண்டும் என்று கூறினேன் அதைக் கேட்டு தனது ஊரில் பெண்களைக் கூட்டிக்கொண்டு மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை உடைத்தார் நமது பொருளாளர் திலகபாமா. கர்மவீரர் அவர்கள் ஒரு சுதந்திரப் போராளி, அவர் ஒன்பது முறை சிறைக்குச் சென்றுள்ளார். குலக்கல்வியை ஒழித்தவர் கர்மவீரர் காமராஜர், மத்திய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் , எனக்குக் அவரது நிர்வாகம் ரொம்ப பிடிக்கும். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர் காமராஜர். இன்று அவர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளைக் கட்டியிருப்பார்.

தமிழகத்தில் நாடார் சங்கம் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்டவருக்கு வேலை தந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு கூட இந்த வேலை வாய்ப்பு தரவில்லை. நாடார் சமுதாயம் வந்து கொண்டிருக்கிறது. சத்திரியர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் . அதற்குக் காலமும் வந்துவிட்டது நேரமும் நெருங்கி விட்டது. உழைப்புக்கேற்ற அங்கீகாரம் வேண்டும். 130 சங்கங்களை ஒன்றிணைப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜெ.முத்துரமேஷ் இது தொடர வேண்டும் இட் இஸ் beginning. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். இந்த சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டது என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சி” எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்

EZHILARASAN D

கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – டிஜிபி எச்சரிக்கை

EZHILARASAN D

தேர்வுக்கு இனி முகக்கவசம் கட்டாயம் – TNPSC அறிவிப்பு

G SaravanaKumar