இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவியானந்தல் கிராமத்தில் இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை விரைவு நீதிமன்றத்தின் வாயிலாகத் தண்டிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார். தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனறும் அவர் கேட்டுக் கொண்டார்.

உயிரிழந்த சரஸ்வதி குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு ரூ. 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்த சரஸ்வதி குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும், திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் சார்பிலும தலா 1லட்ச ரூபாயையும் வேல்முருகன் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.