மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்

சென்னையில் வீட்டின் அறையில் தனது மனைவியின், தங்கையுடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட வட மாநில இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். சென்னை திரு.வி.க. நகர் நான்காவது தெருவில் மேற்கு வங்கம் மாநிலத்தைச்…

சென்னையில் வீட்டின் அறையில் தனது மனைவியின், தங்கையுடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட வட மாநில இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் நான்காவது தெருவில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ்யூ மான்டல் (வயது 27). வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 வருடங்களாக இதே பகுதியில் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகனை மேற்கு வங்காளத்தில் விட்டுவிட்டு, கணேஷ்யூ மட்டும் சென்னை தனியாக வசித்து வந்துள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர்

இந்நிலையில், அவசர அவசரமாக கே.சி.கார்டன் இரண்டாவது தெருவில் சரவணராஜ் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு அறையை வாடைகைக்கு எடுத்துள்ளார். தன்னிடம் வேலை செய்யும் 17 வயது சிறுவன் மற்றும் சௌமித்ரா என்பவருக்கு வீடு வேண்டும் எனக் கூறி 7,000 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.

பின்பு உள்ளே மின்விசிறி மாற்றுவதாக கூறி சென்ற கணேஷ்யூ நீண்ட நேரமாகியும் வெளியே வராவில்லை. அதையடுத்து அவருடன் வேலை செய்யும் சிறுவன் ஒருவர் ஜன்னல் வழியே பார்த்தபோது கணேஷ்யூ , 18 வயது இளம் பெண் ஒருவருடன் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த திரு.வி.க. நகர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஏற்கனவே வசித்து வந்த வீடு அருகில் உள்ள நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காகவே இந்த வீட்டை அவசர அவசரமாக வாடகைக்கு எடுத்து உள்ளே வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண் கணேஷ்யு மான்டலின் மனைவியின் தங்கை என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.