டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர்களில் தொடர் போராட்டம் காரணமாக நிட் குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த நிலையில் நேற்று முந்தினம் பொதுத் தேர்வு சட்டத்திருத்த மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று முதல் நடந்து வருகிறது. இதனிடையே மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் அவ்வப்போது ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பொதுத் தேர்வு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது. இந்த நாட்டின் எதிர்காலம் எதை நோக்கி போகிறது என்ற பெரும் சந்தேகம் எனக்கு இருக்கிறது. நம் நாட்டின் வீதிகளில் சில தினங்களுக்கு முன்பாக நடந்தது வன்முறை கிடையாது, கலவரம் கிடையாது , இந்த நாட்டின் இளைஞர்கள் எதிர்காலத்தின் தூண்கள் தங்களது ஜனநாயக ரீதியான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் இந்த உணர்வுகளை அனைத்து கட்சிகளும் மதிக்க வேண்டும்.
பாஜகவினர் தங்கள் குழந்தைகளிடம் மாணவர்களின் போராட்டத்தை பற்றி கேட்டால் கூட, அந்த குழந்தைகளும் மாணவர்களுக்கே ஆதரவு தெரிவிப்பார்கள். என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. நான் சில மாணவர்களிடம் பேசினேன் சில இளம் பெண்களிடம் பேசினேன். நீ மாணவன் என்று எதை வைத்து முடிவு செய்கிறாய் எகல்லூரியில் படிப்பதா அல்லது பள்ளியில் படிப்பதா அல்லது புத்தகங்களை படிப்பதா என்று கேட்டேன். அதற்கு ஒரு மாணவி, “நாங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வரை நாம் அனைவரும் மாணவர்கள்தான்” என அவர் சொன்னார்.
இன்னொரு தரப்புக் குழுவும் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பு அவர்கள் நினைக்கிறார்கள் உலகம் தட்டையானது என்று தங்களுக்குள் இருந்து தான் அறிவு பீறிட்டு வருகிறது என்று நம்புகிறார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடியவர்கள் மிகவும் மூர்க்கமானவர்கள் அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்கள் பேசும் உண்மையை கவனிக்க மாட்டார்கள். நான் அந்த ஆட்களை முட்டாள்கள் என்று அழைப்பேன் என்று அந்த மாணவி சொன்னார்” என்றார்.
முட்டாள் என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தி உடன் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ராகுல் காந்தி, “ உங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை பிறகு ஏன் கூச்சல் போடுகிறீர்கள் நான் யாரையும் முட்டாள் என்று சொல்லவில்லை முட்டாள்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முட்டாள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் எப்படி சொல்ல முடியும்? நான் எதிரில் இருக்கக்கூடிய பாஜக காரர்கள் யாரையும் பார்த்து முட்டாள் என்று சொல்லாத நிலையில் எதற்காக அவர்கள் இவ்வளவு கோபப்படுகிறார்கள்” என்றார்.



