“திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது. பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பைக் கோராமல், ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதைக் கோருகிறது.

மத்திய பாஜக அரசு முன்னோக்கிச் செல்வதற்கு முன், சற்று நிறுத்தி, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.