சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் காலையில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டது. நேற்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.340-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம் குறைந்தது. இதனையடுத்து மாலையில் திடீரென்று கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600-க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







