“வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை” – செல்வப்பெருந்தகை பேட்டி!

எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே கூடுதல் தொகுதி விவகாரத்தில் இருதரப்பும் விடாபிடியாக இருப்பதால் இழுபறி என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கூட்டணி பேச்சு வார்த்தையில் எங்களுக்கு தேவையானதை நாங்கள் கேட்டு உள்ளோம். திமுக சார்பாக பரிசீலனை செய்யப் போவதாக தெரிவித்தார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

எத்தனை தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிப்போம். தொகுதி குறித்து முழுமையாக பேசியுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். தமிழகத்தின் வெற்றி கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. மதவாதிகளை விரட்டும் கூட்டணி திமுக, வேறு கட்சியுடன் நாங்கள் யாரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கற்பனையளவில் எந்த ஒரு செய்திகளும் எழுதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.