தஞ்சையில் மார்ச் 4ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!

தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கூட்டம் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் மனு குறித்து விசாரணை நடத்தி இன்று மாலை தகவல் சொல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.