பல்வேறு அனுபவங்களை பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நல்லது செய்வார் என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் பிறந்த மண் ஈரோடு. ஈவிகேஎஸ் சம்பத் மைந்தனுக்கு ஸ்டாலின் ஒட்டு கேட்க வந்துள்ளேன்.
இங்கு இடைத்தேர்தல் வர காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். ஈவெரா 46 வயது மதிக்கத்தக்க இளைஞன். கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கபட்டு வந்தவர். ஈவெரா இழப்பு தொகுதி மக்களால் ஏற்று கொள்ள முடியாதது. இந்த சூழலில் மகன் அகால மரணமடைந்ததையடுத்து அவரது தந்தை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஈவெரா விட்டு சென்ற பணிகளை நிறைவேற வேண்டுமானால் அவரது தந்தை வெற்றி பெற வேண்டும். தற்போது நடைபெறும் தேர்தல் எடை போட்டு பார்க்கும் தேர்தல்.
எதிரணியில் உள்ள கூட்டணியில் மோடி பெயரை எங்காவது பயன்படுத்தி உள்ளார்களா?. டெபாசிட் ஆவது பெற வேண்டும் என்பது அவர்கள் கவலை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களிடம் சொன்னோம். கலைஞர் எவ்வாறு தேர்தல் அறிக்கையில் சொன்னோரோ அதே போல ஸ்டாலின் சொல்வதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வோம்.
அண்மைச் செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்
5 ஆண்டுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். முதல் கையெழுத்து ரூ.4 ஆயிரம் உதவி தொகை கொடுத்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். இந்த நாடு மொழி காப்பாற்ற கூட்டணி தொடரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.







