ரசனைக்கும் ருசிக்கும் விருந்து படைத்த துபாய் உணவு திருவிழா 2023

துபாயில் “கல்ஃப் ஃபுட் (Gulf Food)-2023″ எனும் பெயரில் பிரம்மாண்டமான உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. துபாயில் 28 வது சர்வதேச உணவுத் திருவிழா “கல்ஃப் ஃபுட்…

துபாயில் “கல்ஃப் ஃபுட் (Gulf Food)-2023″ எனும் பெயரில் பிரம்மாண்டமான உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.


துபாயில் 28 வது சர்வதேச உணவுத் திருவிழா “கல்ஃப் ஃபுட் (GulFood2023)” எனும் பெயரில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த உணவுத் திருவிழாவில் 125க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. உலக அளவில் நடைபெறும் மிகப் பெரிய உணவுத் திருவிழாவாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

1987ல் வெறுமனே 65 கண்காட்சி அரங்குகளுடன் தொடங்கிய இந்த உணவுத் திருவிழாவில் தற்போது 5000 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் உணவு மற்றும் பானம் தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையும் படியுங்கள் : 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட தோசை… விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய அரசின் சார்பில் வேளாண் மற்றும்  உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) துபாயில்  நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பங்கேற்றது.. உலகெங்கிலும் உள்ள உணவு மற்றும் பானம் தொடர்பான  துறைகளை இணைக்கும் ஒரு தளமான GULFOOD இல் இந்தியா பங்கேற்று, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டது.

இதனையும் படியுங்கள் : வீடு தேடி வரும் இலவச கால்நடை மருத்துவ சேவை! அழையுங்கள் “1962”

அதன்படி உணவுத் திருவிழாவின் இந்திய பெவிலியனை மத்திய உணவு பதப்படுத்தல் மற்றும் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ், இந்திய தூதர்  சுஞ்சய் சுதிர், டாக்டர் எம் அங்கமுத்து, மத்திய மற்றும் மாநில ஏற்றுமதியாளர்களின் பிற பங்குதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த உணவுத் திருவிழாவில் உலகின் பிற பகுதிகளில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை பங்கேற்றுள்ள கண்காட்சி அரங்குகள் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளது. 5000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் 49 சதவிகிதம் புதிய அரங்குகள் என்கிறது உணவுத் திருவிழா கூட்டமைப்பு. இந்த உணவுத் திருவிழாவில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.