’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி…

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி என்றும், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை, அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்று விமர்சனம் செய்தார். மேலும் திராவிட மாடல் சித்தாந்தம் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

https://twitter.com/SuVe4Madurai/status/1654001273006604288?s=20

இதற்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்; மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது; பரிணாமக் கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆளுநரின் விமர்சனத்திற்கு நியூஸ்7 தமிழ் வாயிலாக பதிலளித்த திமுக எம்பி பி.வில்சன், ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் விமர்சனங்கள் மாநிலத்திற்கு உதவாது என்றும், மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.