திருச்செங்கோட்டில் கோயிலுக்கு சீர் வரிசை எடுத்த வந்த பெண்கள்!

திருச்செங்கோடு ஸ்ரீஅழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன்…

திருச்செங்கோடு ஸ்ரீஅழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி அப்பகுதி சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மலைக் காவல் கோயிலிருந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பழம், தேங்காய், தட்டு, புடவை அலங்காரப் பொருட்கள் என 30க்கும் மேற்பட்ட தட்டுகளை சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நரிப்பள்ளம் பகுதியில் இருந்து ஈரோடு சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக நான்கு ரத வீதிகளிலும் நகரின் முக்கிய வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வந்தது அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்களும் இளைஞர்களும் ஆடலும் பாடலுடன் பாடி வந்தனர்.

—-சே.அறிவுச்செல்வன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.