முக்கியச் செய்திகள் தமிழகம்

’இபிஎஸ்-க்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதை கண்டு நாங்கள் வருத்தப்படுகிறோம்’ – கனிமொழி எம்.பி

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை சிறப்பாக செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதே என்று நாங்கள்தான் வருத்தப்படுகிறோம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில் நடைபெற்று வரும் திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன், நகர் மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எம்.பி கனிமொழி, “திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அதிமுக. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அதில் கையெழுத்திடாமல் வைத்திருக்கக் கூடிய ஒரு கவர்னர். அரசாங்கத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கையெழுத்திடாமல் ஒப்புதல் அளிக்காமல் கவர்னரே வைத்திருக்கிறார். அவரை சிறப்பாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

மாநில சுயாட்சி வழங்குவதில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதே என்று நாங்கள்தான் உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம். பாஜகவிடம் முன்னாடியே அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டனர் அதிமுக. அவர்கள் மீண்டு வருவதற்கு தயாராகவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. நம் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருக்கக்கூடிய பாஜக, தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!

Gayathri Venkatesan

காவல் நிலையத்திற்குள் எஸ்எஸ்ஐ தற்கொலை முயற்சி

Web Editor

புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

Halley Karthik