கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இந்தியாவில் விபத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடந்த பத்து நாட்களாக அரசு பேருந்துகள் விபத்திற்குள்ளாகி வருகிறது. அரசு பேருந்துகள் எல்லாம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா?
சுழற்சி பரிசோதனை உள்ளதா? என்பது ஐயம் உள்ளது. அரசு பேருந்து விபத்துகளை தடுக்க பேருந்துகளின் தர சான்றுகளை கொடுக்க வேண்டும். காரணம் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்தில் ஐயம் உள்ளது. அசாம் உள்ளிட்ட சில மாநிலஙக்ளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை தடுக்க நினைக்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது. விரும்பத்தாகாத செயல் வருத்தபடக்கூடிய செயல். இதில் எவ்விய மாற்று கருத்தும் இல்லை. கூட்டணி சீட்டுகள் தொடர்பாக நான் கருத்து சொல்ல முடியாது.
மத அரசியல் செய்வது நாங்கள் இல்லை. அனைத்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறோம். பிளம் கேக் யார் சாப்பிடுவது என திமுகவுக்கு, தவெகவுக்கும் போட்டி. அதை தான் அரண்மனை கிறிஸ்துமஸ் விழாவில் பார்த்தோம். நாங்கள் மத அரசியல் செய்ய வில்லை.
காவல்துறை அழுத்தத்தில் கருப்பு ஆடுகள் உள்ளனர். சீருடையில் இருக்கும் போது தண்டனை கடுமையாக இருக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரக்ள் நடந்து கொள்வது முக்கியம், காவலர்களுக்கு பணிச்சுமை அதிகம் என்று தெரிவித்துள்ளார்.







