சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 15ம் தேதி ஒரு கிராம் ரூ.12,515 க்கும், சவரன் ரூ.1,00,120க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.12,820 ஆக அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது.








