முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பி

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வட மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோவை திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங் சாய் வெளியிட்டுள்ளார்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது. இந்நிலையில் அதிக அளவிலான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்ததாக கூறப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் திருப்பூர் எஸ்பி வடமாநில தொழிலாளார்கள் பேசும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் பேசியுள்ளனர். “நான் திருப்பூரில் 5 ஆண்டுகளாக இங்கு இருந்துவருகிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ரூமில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறேன். ஹோலி பண்டிகைக்காக  பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள்” என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த சூரஜ்குமார் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

அண்மைச் செய்தி : தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை

மற்றொரு வடமாநில தொழிலாளி, காவல்துறை தங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். பீஹாரில் வந்துள்ள தாஸ், நாங்கள் பாதுகாப்பாக இங்கு பணிபுரிந்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

Halley Karthik

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

Jeba Arul Robinson

பிரசவ வார்டில் எலி தொல்லை: கர்ப்பிணிகள் அவதி

Niruban Chakkaaravarthi