முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

சேப்பாக்கத்தில் ‘தல’ தோனி – குவிந்த ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கும் நிலையில், அதற்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் எம்எஸ் தோனி சென்னை வந்தடைந்தார். நேற்று விமான நிலையத்திலேயே தோனியை காண குவிந்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அண்மைச் செய்தி : பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் – வீடியோ வெளியிட்ட திருப்பூர் எஸ்பி

இந்நிலையில், இன்று மாலை சேப்பாக்க மைதானத்துக்கு சென்ற தோனி சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களுடன் வலை பயிற்சியில் ஈடுபட்டார்.  தோனி சேப்பாகம் மைதானத்துக்கு வருவதை முன்பே யூகித்த ரசிகர்கள் அங்கு குவியத் தொடங்கினர். தோனி பயிற்சியில் ஈடுபட இருப்பதால் அதனை தவறவிட்டுவிடக்கூடாது என ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வருகை தந்தனர். இதனையொட்டி காவல்துறையினரும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. அதுவரை தோனியை பார்த்து ரசிக்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்னை உங்களால் வீழ்த்த முடியாது – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆவேசம்

EZHILARASAN D

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

G SaravanaKumar

பொங்கல் பண்டிகை: 12ந்தேதி முதல் 18ந்தேதிவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரும் திரையரங்க உரிமையாளர்கள்

Web Editor