காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
பருவமழை காரணமாக கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு, 6 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.







