தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.
சென்னையில் கொசஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் நேற்று திடீரென ஆற்றுநீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இப்பகுதியில், பல்வேறு தொழிற்சாலைகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் – ஏ.ஆர்.ரகுமான்
வழக்கமாக எண்ணூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் மாறும் கொசஸ்தலை ஆறு, நேற்று மஞ்சள் நிறமாக மாறியதால் மீனவர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த மஞ்சள் நிற கழிவு எங்கிருந்து வந்தது, தொழிற்சாலை கழிவா அல்லது வேறு ஏதாவது கலந்துள்ளதா என அவர்கள் குழம்பினர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி ஆணையர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று நீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.