This News Fact Checked by ‘Newsmeter’
சைஃப் அலி கான் மீதான தாக்குதல் நடத்தியவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும், சிலர் அவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
ஜனவரி 16ம் தேதி அதிகாலையில், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானும் அவரது குடும்பத்தினரும் ஒரு கொடூரமான நிகழவை எதிர்கொண்டனர். மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த நிகழ்வு ஏற்பட்டது. வீட்டிற்குள் நுழைந்த நபரை முதலில் அவ்வீட்டின் ஆயா, எலியம்மா பிலிப், சைஃப்பின் 4 வயது மகன் ஜஹாங்கீரின் அறையில் கண்டார். சைஃப் அலி கான் மற்றும் மற்றொரு ஊழியர் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர் ஆயாவைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பல புகார்கள் பரவி வருகின்றன. தாக்கியவர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்பு கொண்டவர் என சில பயனர்கள் குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் முஸ்லிம் பெயர்களைப் பகிர்ந்துள்ளனர், இந்த சம்பவம் தொடர்பாக சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனர் ஒருவர், “முஸ்லிம் பாலிவுட் நடிகர், சைஃப் அலி கான், ஆர்எஸ்எஸ் உறுப்பினரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமை! #SaifAliKhan.” சைஃப் அலி கானின் புகைப்படம் மற்றும் சிலர் குங்குமச் சால்வை அணிந்து வாள்களை வைத்திருக்கும் படத்துடன் இந்த பதிவு பகிரப்பட்டது.










