வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.
பின் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்துவந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் பட்டதின் மொத்த காட்சிகளையும் இம்மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருநாள் முன்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் படத்தின் இதர காட்சிகள், டப்பிங் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பாடல்கள், டீசர், மற்றும் ட்ரெலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







