மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இதற்குமுன்பாக அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை, இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தனது இல்லத்தில் நடத்தவுள்ளார்.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் ஜூலை 18ஆம் தேதி, காலை 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் மற்று சமையல் எரிவாயு விலை உயர்வு, நாட்டின் கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்துப் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.