சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துவந்தது. இந்நிலையில், ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், காலை நிலவரப்படி, சவரனுக்கு 144 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 18 ரூபாய் விலை குறைந்து 4,542 ரூபாய்க்கும், ஒரு சவரன் 36,336 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதுபோல், வெள்ளி விலையும் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 73 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
அடுத்த மாதம் ஆவணியில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும். இந்நிலையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், பொதுமக்கள் இந்த மாதமே தங்கத்தை வாங்கத் தொடங்குவார், என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.







