தொண்டர்கள் விரும்பினால் தலைமையை ஏற்க தயார்; துரை வைகோ

கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது தலைமையை விரும்பினால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இன்று நியூஸ்…

கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது தலைமையை விரும்பினால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இன்று நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி பணிகளை முழுமையாக செய்தேன். 10 ஆண்டுகளாக இருந்த தொய்வு நிலையில் இருந்து தற்போது மீண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வருவாய் பற்றாக்குறையை பல மடங்கு குறைத்து மிக சிறப்பான நிதிநிலை அறிக்கையை திமுக தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயணித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்துவருகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகள் மோசமான ஆட்சி நடைபெற்றது” என்றார்.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு பட்ஜெட் ஒரு சிறப்பான பட்ஜெட் என்று தெரிவித்த அவர், பல முறைகேடுகள் இருந்த காரணத்தால் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டது என்று பேசினார். அதனை தொடர்ந்து,  நிர்வாகிகளும், தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்து எனது தலைமையை விரும்பினால் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.