ராமநாதபுரம் மாவட்டத்தின் உச்சிப்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமேஷ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில் இன்று மதியம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளை சரியாக உள்ளதா என்று பார்வையிட்டார்.
அங்கிருந்த கோப்புகள் அனைத்தும் சரியாக இருந்ததை பார்த்த அவர், பணியில் இருந்த காவலர்களை பாராட்டினார். தொடர்ந்து வெகுமதியாக பணியில் இருந்த காவலர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.







