இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு

சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து…

சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சித்திபுத்தி விநாயகர் கோயிலும், பெரியபாளையத்து அம்மன் கோயிலிலும், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர், இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல், இருப்பதை பதிவு செய்துள்ளோம் என்றும், சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’; உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல்’

தொடர்ந்து பேசிய அவர், பயத்தின் அடிப்படையில் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கருத்து தெரிவித்தார். மேலும், ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.